தேசிய செய்திகள்

தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி + "||" + MS Dhoni's parents hospitalised after testing positive for covid

தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்ட்,

ஐபிஎல் 14ஆவது சீசனில் பங்கேற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தற்போது மும்பையில் உள்ளார். இன்று இரவு 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காகச் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தோனியின் பெற்றோருக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும், நாடித்துடிப்பின் அளவும் நிலையாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனில் தோனி பங்கேற்றுவிட்டு அதன்பிறகு வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதன்பிறகு, ஐபிஎல் 14ஆவது சீசனில் பங்கேற்பதற்காக மார்ச் மாத துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவப் பாதுகாப்பு வடத்திற்குள் வந்துவிட்டார். அதன்பிறகு, அவர் பெற்றோர்களைச் சந்திக்கவில்லை. தற்போது 8 அணி வீரர்களும் மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி, கிரிக்கெட் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு
இந்தியா கொரோனா வைரசின் பிடியில் சிக்கி, மூச்சு விட திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,768 பேர் பாதிப்பு 16 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்பு 20 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
4. காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம்
காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
5. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு உயிரிழந்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு உயிரிழந்தார்.