பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு புகலிடம்: மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு புகலிடம்:  மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை
x

பயங்கரவாத நெட்வொர்க்குகள் மற்றும் புகலிடங்கள் எல்லாவற்றையும் அகற்றினாலேயே, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் குழு ஒன்று, மண்டல மற்றும் சர்வதேச அளவில் உலகளாவிய பயங்கரவாதம் எதிர்கொள்ளல் என்ற தலைப்பிலான அறிக்கையை இன்று சமர்ப்பித்தது.

பி.பி. சவுத்ரி தலைமையிலான இந்த குழுவின் அறிக்கையில், இந்தியாவில் பயங்கரவாதம் ஆனது, எல்லை கடந்து ஊக்குவிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆனது, புகலிடம் அளித்து வருகிறது என திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து பயங்கரவாத நெட்வொர்க்குகள் மற்றும் புகலிடங்கள் வேரோடு களையப்படுவதற்கான செயல் திட்டம் ஒன்று மற்றும் அதற்கான நடைமுறை ஆகியவை தேவையாக உள்ளது என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் மற்றும் பிற தளவாடங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை கொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்த அவை பயன்படுத்தப்படுகின்றன.

பயங்கரவாத நெட்வொர்க்குகள் மற்றும் புகலிடங்கள் எல்லாவற்றையும் அகற்றினாலேயே, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story