முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீமான் மனு தாக்கல்
முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீமான் மனு தாக்கல் செய்தார். #Seeman
மதுரை,
மதிமுகவினர் உடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர். இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர். இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் கொடிக்கம்புகளால் தாக்கி கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி சீமான் இன்று மனு தாக்கல் செய்தார். இது சம்பவம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Related Tags :
Next Story