ஊரடங்கு தளர்வுகள்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 July 2021 7:39 AM GMT (Updated: 1 July 2021 7:39 AM GMT)

தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும்வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை அமல்படுத்தினார்.

அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. 

கொரோனா பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை அறிவித்தது. இதன்படி 27 மாவட்டங்களில் பேருந்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது. 

இந்த நிலையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story