'தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது?' - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x

தமிழ்நாட்டில் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக் கூடாது? என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தவும், தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை அளிக்க கோரியும், வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைதீர் ஆணையம் அமைக்கவும், உள்நாட்டு விமான சேவைகளில் தமிழில் அறிவிப்புகளை வெளியிடக் கோரியும், சென்னையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க கோரியும் உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது?' என கேள்வி எழுப்பினர். மேலும் வெளிநாடு வாழ் தமிழர் குறைதீர் ஆணையம் அமைப்பது தொடர்பாகவும், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாகவும் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
  • chat