உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 18 July 2019 10:15 PM GMT (Updated: 18 July 2019 8:01 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 35 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர்.


* ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து இனவெறி கருத்து கூறிய ஜனாதிபதி டிரம்புக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறிய கருத்துகள் மிக மிக தரம் தாழ்ந்தவை என்றும், இதன் மூலம் அவர் ஜனாதிபதி பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்றும் அவர் கூறினார்.

* மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

* ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானதாக கூறப்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய பொருளை கடத்திய வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றியதாக ஈரான் புரட்சிகரப்படை தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானின் பட்கிஸ் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புபடை வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 35 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர்.Next Story