சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் 17 நகரங்களில் வெள்ளம் - 7 பேர் பலி


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் 17 நகரங்களில் வெள்ளம் - 7 பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2019 8:18 PM GMT (Updated: 21 Aug 2019 8:18 PM GMT)

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையால், 17 நகரங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாயினர்.


* தாய்லாந்துக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பில், ‘எப்-16’ ரக போர் விமானங்களை (எண்ணிக்கை 66) விற்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

* சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் 17 நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியானதாகவும், 24 பேர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* நைஜீரியாவின் மத்திய மாகாணமான நசரவாவில் துணை கவர்னரின் அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் பலியாகினர். இந்த தாக்குதலில் துணை கவர்னர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

* வெனிசூலா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருநாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆகிய இருவரும் உறுதி செய்துள்ளனர்.

* வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவித்துள்ளார்.

* கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் பிரதமர் தனக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அடுத்த மாதம் செல்ல இருந்த டென்மார்க் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்துவிட்டார்.


Next Story