உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் சாவு + "||" + Eight people die in Pakistan boat crash

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் சாவு

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் சாவு
பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஒக்ரா மாவட்டத்தில் திபால்பூர் நகரில் உள்ள சுத்லெஜ் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணம் செய்தனர்.

மல்கு ஷெஜ்கா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.


இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு குழுவினர் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். அவர்களது உடல் மீட்கப்பட்டன. அதே சமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 பேரை மீட்புபடையினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் 22 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
2. கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா உள்ளது- இம்ரான் கான் சொல்கிறார்
கராச்சி தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தான் கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 10 ஆக உயர்வு
பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
4. கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல் : 2 பொதுமக்கள் பலி ;4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் 4 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதாக பாகிஸ்தான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.