‘கொரோனா வைரஸ்’ பீதி எதிரொலி: சீனாவில், இந்திய குடியரசு தின விழா ரத்து - இந்திய தூதரகம் நடவடிக்கை


‘கொரோனா வைரஸ்’ பீதி எதிரொலி: சீனாவில், இந்திய குடியரசு தின விழா ரத்து - இந்திய தூதரகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2020 8:01 PM GMT (Updated: 24 Jan 2020 8:01 PM GMT)

‘கொரோனா வைரஸ்’ பீதி எதிரொலியாக, சீனாவில், இந்திய குடியரசு தின விழா ரத்து செய்து இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய குடியரசு தின விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதை இந்திய தூதரகம் திடீரென ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உருவான சூழ்நிலையாலும், பொது நிகழ்ச்சிகளை சீனா ரத்து செய்து வருவதாலும் 26-ந் தேதி நடைபெற இருந்த இந்திய குடியரசு தின விழாவை இந்திய தூதரகம் ரத்து செய்கிறது“ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசு தின விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இந்திய தூதரகம் நடத்திய விருந்தில், சீன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story