உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது + "||" + Pakistan reports 83 deaths by coronavirus 4,072 cases in a day

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
இஸ்லாமாபாத், 

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நோயாளிகளை சிகிச்சை அளித்து பாதுகாப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,02,955 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் அங்கு இதுவரை மொத்தம் 4,118 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 92,624 பேர் குணமடைந்துள்ளனர்.  

அங்கு அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 78,267 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 74,202 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை ஒட்டுமொத்தமாக 12,39,153 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
3. பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா
பிரேசிலில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 343 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. விபத்தில் பலியான விவசாயிக்கு கொரோனா: இறுதிச்சடங்கில் பங்கேற்ற கிராம மக்கள் பீதி
கும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் பலியான விவசாயியின் பிரேத பரிசோதனைக்கு முன்பாக எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இறுதி சடங்கில் கலந்து கொண்ட கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.