கிரிக்கெட்

கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது + "||" + Cricket Series: West Indies go to Pakistan

கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது

கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது.
கராச்சி, 

மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நேற்று காலை விமானம் மூலம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். 

3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் தொடரை கடைசி நேரத்தில் முறித்து கொண்டு களம் இறங்காமல் நாடு திரும்பியது. இதனால் பாகிஸ்தான் சென்றடைந்த வெஸ்ட்இண்டீஸ் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாங்கள் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டித் தொடர் சிறப்பு பாதுகாப்புக்கு மத்தியில் கராச்சியில் அரங்கேறுகிறது. இதில் 20 ஓவர் போட்டிகள் வருகிற 13, 14, 16 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 18, 20, 22 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. கேப்டன் பொல்லார்ட், பாபியன் ஆலென், ஒபெட் மெக்காய் ஆகியோர் காயம் காரணமாகவும், இவின் லீவிஸ், ஹெட்மயர், ஆந்த்ரே ரஸ்செல், சிமோன்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணத்தினாலும் இந்த போட்டி தொடரில் இருந்து விலகி விட்டனர். 

முன்னாள் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலம் குறைந்த வெஸ்ட்இண்டீஸ் அணி தான் இந்த தொடரில் ஆடுகிறது. 20 ஓவர் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரனும், ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது
இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2. 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை எடுத்துள்ளது.
3. 3-வது ஒருநாள் போட்டி: தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
இந்திய அணி 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
4. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட்இண்டீஸ்..!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
5. பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி - கராச்சியில் இன்று நடைபெறுகிறது
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.