ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்: 148 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 March 2022 11:38 AM GMT (Updated: 14 March 2022 11:38 AM GMT)

பாகிஸ்தான் அணி 53 ஓவர்களில் 148 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கராச்சி, 

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கியது. அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். அவர் 160 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும், அலெக்ஸ் கேரி 93 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை பாகிஸ்தான் அணி தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய சைபுதீன் 13 ரன்களிலும், இமாம் உல் ஹாக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியிம் கேப்டன் பாபர் ஆசம் அதிகபட்சமாக 36 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இறுதியில் அந்த அணி 53 ஓவர்களில் 148 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி பாலோ ஆன் ஆனது எனினும் ஆஸ்திரேலிய அணியே இரண்டாம் இன்னிசை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை விட 408 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


Next Story