'பாகிஸ்தானில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகள்'சர்வதேச ஆக்கி சம்மேளனம் அறிவிப்பு...!!


பாகிஸ்தானில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகள்சர்வதேச ஆக்கி சம்மேளனம் அறிவிப்பு...!!
x

சர்வதேச ஆக்கி சம்மேளனம் (FIH) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளை பாகிஸ்தானில் நடத்த உள்ளது.

லாகூர்,

33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.இதில் நடைபெற உள்ள ஆக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களை பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடத்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் திட்டமிட்டு உள்ளது.

கடைசியாக 2004 -ல் சர்வதேச போட்டிகளை நடத்திய பாகிஸ்தான், 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 13 முதல் 24 வரை எட்டு அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகளை லாகூரில் நடத்துகிறது.

"பாகிஸ்தான் ஆக்கி ரசிகர்கள் 20 ஆண்டுகளாக சர்வதேச ஆக்கி நட்சத்திரங்களை பார்க்க முடியாமல் உள்ளனர். மேலும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் ஆக்கி விளையாட்டை மீண்டும் அதிகரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று எப்ஐஎச்-ன் பொதுச்செயலாளர் ஹைதர் ஹுசைன் கூறினார்.

பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம், உயர்மட்ட அமைப்பில் அதிக பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்த நிகழ்வை பாகிஸ்தானுக்கு ஒதுக்க எப்ஐஎச்-ஐ சமாதானப்படுத்துவதில் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் அவர் 'சர்வதேச ஹாக்கி மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பினால் அது நாட்டில் ஆக்கி ஆட்டத்தை மீண்டும் உயர்த்த உதவும்.எங்கள் நிலைப்பாட்டை பல நாடுகள் ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.துரதிர்ஷ்டவசமாக, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த கடைசி இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பாகிஸ்தான் தகுதி பெறத் தவறிவிட்டது. ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் தகுதி பெறுவோம். லாகூரில் நடைபெறும் போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள்' என்று தான் நம்புவதாக ஹுசைன் கூறி உள்ளார்.


Next Story