சினிமா செய்திகள்
பாலியல் புகார் கூறியஸ்ரீரெட்டி மீண்டும் நடிக்கிறார்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சீரழித்ததாக தெரிவித்த பரபரப்பு புகாரினால் இந்திய திரையுலகமே அதிர்ச்சியானது.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சீரழித்ததாக தெரிவித்த பரபரப்பு புகாரினால் இந்திய திரையுலகமே அதிர்ச்சியானது. ஸ்ரீலீக்ஸ் முகநூல் என்ற பாலியல் பக்கத்தில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலு, கதாசிரியர் கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஆகியோர் சிக்கினார்கள்.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு தடை விதித்தது. யாரும் ஸ்ரீரெட்டியை படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் எச்சரித்தது. இந்த நிலையில் மனித உரிமை கமிஷன் ஸ்ரீரெட்டி புகார் குறித்து விசாரணையில் இறங்கி நோட்டீசு அனுப்பியதால் தெலுங்கு நடிகர் சங்கம் தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தது.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசி வந்த பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா அவரை தனது படத்தில் நடிக்க வைப்பேன் என்று அறிவித்தார். தனது புதிய படத்தில் ஸ்ரீரெட்டிக்காக ஒரு கதாபாத்திரத்தை அவர் உருவாக்கி இருப்பதாகவும் விரைவில் ஸ்ரீரெட்டி அதில் நடிப்பார் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.