'வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயம் கிடையாது' - பகத் பாசிலின் அறிவுரை வைரல்

சினிமாவைவிட தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன என்று பகத் பாசில் கூறினார்.

Update: 2024-04-26 05:12 GMT

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், மாமன்னன், விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார். பகத் பாசில் நடிப்பில் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் மலையாள படம் ஆவேஷம். இப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி பகத் பாசில் அளித்துள்ள பேட்டியில், "ரசிகர்கள் தியேட்டரில் படங்களை பார்த்து விட்டு அங்கேயே படம் பற்றிய கருத்தை பேசுங்கள். அல்லது வீட்டுக்கு திரும்பி செல்லும் வழியில் படம் பற்றி உரையாடுங்கள்.

இதை விடுத்து வீட்டுக்குள் உட்கார்ந்து சாப்பிடும்போது நடிகர்கள் மற்றும் அவர்களின் நடிப்பை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா என்பது பெரிய விஷயம் கிடையாது. சினிமாவை பற்றி பேசுவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. சினிமாவைவிட தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. எனவே என்னைப்போன்ற நடிகர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்'' என்றார். பகத் பாசிலின் அறிவுரை வலைத்தளத்தில் வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்