சினிமா செய்திகள்
‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில்குத்து சண்டை வீரராக கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில் குத்து சண்டை வீரராக நடிக்கிறார்.
‘‘அரசாங்க வேலையில் இருக்கும் ஒரு ஜாலியான அப்பா, குத்து சண்டை வீரரான அவருடைய மகன், இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம்,..அது, அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகி இருக்கிறது, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம்’’ என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் திரு.

படத்தை பற்றி அவர் மேலும் சொல்கிறார்:-

‘‘கார்த்திக்-கவுதம் கார்த்திக் இருவரும் இந்த படத்திலும் அப்பா-மகனாக நடிக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். வில்லன்களாக மகேந்திரன், மைம்கோபி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

ரெஜினா கசன்ட்ரா, சதீஷ், விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். பெரும்பகுதி காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’