தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்

அர்ஜெண்டோ என்ற நடிகை தனது மகனாக தன்னுடன் நடித்த ஒரு நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Update: 2018-08-21 06:59 GMT
பிரபல தயாரிப்பாளர், ஹாலிவுட் ஜாம்பவான் வெய்ன்ஸ்டீன்  மீது பாலியல் புகார் கூறியவர்களில் முதன்மையானவர் ஆசியா அர்ஜெண்டோ  என்ற நடிகை.  தனது மகனாக தன்னுடன் நடித்த ஒரு நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் எழுந்த விசயம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜிம்மிம் பென்னட்  என்ற அந்த நடிகர் 17 வயதாக இருக்கும்போது கலிபோர்னியாவிலுள்ள ஒரு ஓட்டலில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிம்மியையை விட 20 வயது மூத்தவரான இத்தாலி நடிகையான அர்ஜெண்டோ அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து தான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களைக் காட்டி அவரை மயக்கி அவருடன் பாலுறவு கொண்டதாக தெரிகிறது.

உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட ஜிம்மி சார்பில் 3.5 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொரப்பட்டுள்ளது. ஆனால் 380,000 டாலர்கள் கொடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்