கல்லூரி மாணவிகளுக்கு ஜாக்குலின் தரும் அழகு டிப்ஸ்

இலங்கையில் இருந்து இந்தி திரை உலகிற்கு கிடைத்த அழகு தேவதை, ஜாக்குலின் பெர்ணான்டஸ். ‘மிஸ் ஸ்ரீலங்கா’ அழகியாக தேர்வான இவர், இந்திய திரை உலகிலும் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Update: 2018-09-16 08:05 GMT
ஜாக்குலின் பெர்ணான்டஸ் தற்போது ‘ரேஸ்-3’ என்ற இந்திப் படத்தில் நடித்து வரு கிறார். அவரிடம் சில கேள்விகள்:

நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் ரேஸ் பிரியைதானா?


நான் ரேஸ் போட்டிகளை பார்க்கமட்டுமே செய்வேன். நிஜ வாழ்க்கையில் எந்த ரேஸ் சாகசத்திலும் நான் ஈடுபட்டதில்லை. நான் மிகுந்த பொறுமைசாலி. எதையும் நிதான மாகவே கையாளுவேன். ரேஸ் போன்றவை எல்லாம் மிகவும் பதற்றமானது. அதில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ரேஸில் பங்குபெறும்போது மனதை ஒருநிலைப்படுத்தி மூளைக்கும், இதயத்திற்கும் அதிக வேலை கொடுக்கவேண்டும். என்னால் அதெல்லாம் முடியாத வேலை.

இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் அழகுக்கு கொடுக்கும் முக்கியத் துவம்?

அழகு என்பது மிக முக்கியமானது. அதை காப்பாற்ற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் கஷ்டமானது. அழகை வாழ்நாள் முழுக்க பராமரிக்கவேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் உடற்பயிற்சியும் செய்துவர வேண்டும். அதிலும் ஒருமுறை அழகியாக தோ்வு செய்யப்பட்டால் எப்போதும் அழகாகவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிடுகிறது. சினிமாவில் எனக்கு அடர்த்தியான மேக்கப் போடப்படுகிறது. அவைகளில் பெருமளவு ரசாயனம் கலந்திருப்பது எனக்கு தெரியும். அதனால் அந்த மேக்கப்பை கலைக்கும் வரை, என் முகத்திற்கு என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு இருந்து கொண்டேயிருக்கும். நான் எப்போதுமே இயற்கையான அழகு சாதன பொருட்களையே விரும்புவேன். அதையே முடிந்த அளவு பயன்படுத்துகிறேன். அதனால் இயற்கை அழகுடன் ஜொலிக்கிறேன்.

இன்றைய சினிமா வாழ்க்கை உங்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியை தந்திருக்கிறது?


நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. அந்த கனவு நிறைவேறியதால் நான் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அலாவுதீன் என்ற என் முதல் படத்தில் இருந்து ரேஸ்-3 வரையிலான இன்றைய சினிமா வரை நான் அனுபவித்து நடிக்கிறேன். நடிகை யாகவேண்டும் என்பதால்தான் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்.

நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள்?

நான் நன்றாக சாப்பிடுவேன். சமைக்கவும் செய்வேன். காய்கறிகளை வேகவைத்து ‘பேக்’ செய்து உண்ணும் உணவுகளை சமைக்க கற்றிருக்கிறேன். அவை எனக்கு பிடித்த சுவையான உணவுகளாகும்.

உங்களுக்கு பிடித்த இயக்குனர் மற்றும் நடிகர் யார்?


எனக்கு பிடித்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. மற்றவர்களைவிட அவர் டைரக்டு செய்யும் விதம் வித்தியாசமாக இருக்கும். கதாநாயகியை புதுமையான கோணத்தில் வெளிப்படுத்த அவரால் முடியும். எனக்கு பிடித்த நடிகர் ரண்வீர் சிங். அவருடைய சுறுசுறுப்பு, வேகம், அர்ப்பணிப்பு எல்லாமுமே அவரை நோக்கி நம்மை ஈர்த்துவிடும்.

உங்கள் கைப்பையில் எப்போதும் வைத்தி ருக்கும் மேக்கப் பொருட்கள் என்னென்ன?

மஸ்காரா, லிப்ஸ்டிக் ேபான்றவை எப்போதும் இருக்கும். லிப்பாம், வாஸலின் போன்றவைகளையும் வைத்திருப்பேன். என் கண்கள் சிறியது. அதனால் மூடிக் கொண்டிருப்பது போலவே தெரியும். அதை அழகுபடுத்த மஸ்காரா, காஜல் ஆகியவ ற்றை பயன்படுத்துவேன். உதடுகள் உலராமல் இருக்க, லிப்பாம் பயன் படுத்துவேன்.

மும்பைதான் உங்களுக்கு அதிகமாக பிடித்த நகரமா?

ஆமாம். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். மும்பை மாநகரம் எனக்கு பழகிவிட்டது. இங்குள்ள மக்களை நான் விரும்பி ஏற்றுக் கொண்டேன். அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது ஓய்வெடுக்கத்தான் இலங்கை செல்வேன்.

உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யார்?

சோனம் கபூர் ஆரம்ப காலத்திலிருந்தே என் நெருங்கிய தோழி. சல்மான் கான் நல்ல மனம் கொண்ட நண்பர். அவரோடு சேர்ந்து நடிப்பது நல்ல அனுபவம். சினிமா பற்றிய பல நெளிவு சுளிவுகளை எனக்கு கற்றுத் தந்தவர். கர்வமின்றி அன்பாக பழகக் கூடியவர். அவர் சிறைக்குச் செல்ல நேரிட்ட போது மிகவும் மனவேதனை அடைந்தேன். அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

உங்கள் தலைமுடியை எப்படி பராமரிக்கிறீர்கள்?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாரம் இருமுறை சூடாக்கி தலையில் தேய்த்துக் கொள்வேன். முட்டை வெள்ளை கருவை தேய்த்துக் குளிப்பேன்.

உங்களுக்கு பிடிக்காத விஷயம்?

அதீத வேகம், பரபரப்பு போன்றவை எப்போதும் நல்லதல்ல. அது உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும். கவன சிதறல் ஏற்பட்டு, செய்யும் வேலையிலும் தவறுகள் தோன்றும். மும்பை மாநகரின் பரபரப்பு எனக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தும்.

கல்லூரி மாணவிகள் மேக்கப்பில் அதிக அக்கறை செலுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது தேவையற்றது. மேக்கப் ஒருபோதும் நம்மை அழகாகக் காட்டாது. அது அலர்ஜியையும் ஏற்படுத்தும். தொடர்ந்து அழகு படுத்தும்போது சருமத்தின் இயற்கைத்தன்மை குறைந் துவிடும். பிற்காலத்தில் மேக்கப் போடாமல் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகிவிடும். அதனால் கல்லூரி மாணவிகள் மேக்கப்பை தவிர்ப்பது நல்லது. நடிகை என்ற காரணத்தால் என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அது எனக்கு வருத்தம்தான். 

மேலும் செய்திகள்