பொங்கல் பண்டிகையில் மன்மோகன் சிங் படம்

2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அவருடையை வாழ்க்கை வரலாறு ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது.

Update: 2018-12-28 22:45 GMT
மன்மோகன் சிங்கிடம் ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு இதை எழுதி இருந்தார். இந்த புத்தகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புத்தகத்தை மையமாக வைத்து இந்தியில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜுன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்துள்ளனர். விஜய் ரத்னாகர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகத்தில் இடம்பெற்றவை என்ற குறிப்பு டிரெய்லரில் உள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, ரஷியாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம், ஆட்சி கால சாதனைகள் போன்ற வி‌ஷயங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 11–ந் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்