சினிமா செய்திகள்
திருமணம் செய்து சினிமாவை விட்டு விலக முடிவா? - நடிகை அஞ்சலி பேட்டி

திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகுவது குறித்து நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:-

நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, அதன்பிறகு நடிகையானேன். அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது. அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக்கொண்டார். நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை.

திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்.

நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை.” இவ்வாறு அஞ்சலி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்