இந்தியில் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

பார்த்திபன் நடித்து இயக்கி திரைக்கு வந்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும்.

Update: 2020-01-06 23:45 GMT
பார்த்திபன் ஒருவர் மட்டுமே திரையில் தெரிவார். படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள்.

பட விழாக்களில் ஒத்த செருப்பு படம் திரையிடப்பட்டு விருதுகளும் பெற்றது. இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் நவாசுதின் சித்திக் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பார்த்திபன் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு இரவின் நிழல் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த தலைப்பை வெளியிட்ட இயக்குனர் பாரதிராஜா, “ஒத்த செருப்பு படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன்னை உயர்த்திக்கொண்ட பார்த்திபன் தொடங்கும் இரவின் நிழல் உலக விருதுகள் வென்றெடுக்கும்” என்று வாழ்த்தினார்.

இந்த படத்தையும் பார்த்திபன் புதுமையாக இயக்க இருக்கிறார். அதாவது முழு படத்தையும் ஒரே ‘ஷாட்’டில் எடுக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்