தவிக்கும் வட மாநிலத்தவர்: லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தி உள்ளார்.

Update: 2020-05-06 04:54 GMT
சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரணமாக ரூ.4 கோடி வரை உதவி இருக்கிறார். கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தி உள்ளார். அத்துடன் நடிகர்-நடிகைகளிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேகரித்து, தாய் அறக்கட்டளை மூலம் வினியோகித்து வருகிறார். அவருக்கு நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் அரிசி மூட்டைகளை அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊருக்கு திரும்ப உதவும்படி லாரன்சுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வீடியோவில் பெண் தொழிலாளர்கள் உருக்கமாக “எங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும், சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறியிருந்தனர்.

அந்த வீடியோவை நடிகர் லாரன்ஸ் வெளியிட்டு அவர்களுக்கு உதவும் படி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “ராஜமுந்திரி, விஜயவாடாவை சேர்ந்த தொழிலாளர்கள் உணவும், தங்கும் இடமும் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஏற்கனவே பலர் சொந்த ஊருக்கு செல்ல உதவியிருக்கும் தாங்கள், இந்த தொழிலாளர்களுக் கும் போக்குவரத்து வசதி செய்து கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோவையும் முதல்- அமைச்சர் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்