கொரோனா தொற்று: பிரபல குணச்சித்திர நடிகர் மரணம்

பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர்.என்ற ஜி.ராமச்சந்திரன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

Update: 2021-06-03 01:17 GMT
பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ஆர்.என்ற ஜி.ராமச்சந்திரன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். இவர் களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராஜா, மனுநீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்கராசி நல்ல ராசி, காதலி காணவில்லை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ஜி.ராமச்சந்திரனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்தது. ஆனாலும் உடல்நிலை மோசமடைந்து ஜி.ராமச்சந்திரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. இவரது மனைவி பூமணி சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த ஜி.ராமச்சந்திரனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நடிகர்கள், இயக்குனர்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்