உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் வடிவேலு

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு திடீரென சந்தித்துப் பேசினார்.;

Update:2021-09-22 11:06 IST
சென்னை,

நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு  நட்பு ரீதியாக நேரில் சந்தித்துப் பேசினார். நேரில் சந்தித்த அவர், உதயநிதிக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று  கூறப்படுகிறது.

2 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்