’மா இன்டி பங்காரம்’...கவனம் ஈர்க்கும் சமந்தாவின் பர்ஸ்ட் லுக்

இந்த படத்தில் குல்ஷன் தேவையா மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.;

Update:2026-01-07 11:25 IST

சென்னை,

நட்சத்திர நடிகை சமந்தா கடைசியாக சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.

இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் மா இன்டி பங்காரம். கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், சமந்தாவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதனுடன் இப்படத்தின் டீசர் டிரெய்லர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டீசர் டிரெய்லர் வருகிற 9-ம் காலை 10 மணிக்கு வெளியாகிறது. நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா, குல்ஷன் தேவையா மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்