’திரௌபதி 2’...கவனம் ஈர்க்கும் புதிய பாடலின் புரோமோ

இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2026-01-07 11:51 IST

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடல் 'தராசுகி ராம்' புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் இன்று மாலை 5.02 மணிக்கு வெளியாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்