‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து விலகியதற்கு அதுதான் காரணம்...மனம் திறந்த நடிகை சாக்சி

பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து விலகியதற்கு சாக்சி விளக்கம் அளித்தார்.;

Update:2026-01-07 07:02 IST

சென்னை,

மராத்தி நடிகை சாக்சி வைத்யா, தெலுங்கில் ‘ஏஜென்ட்’ மற்றும் ‘காந்திவதரி அர்ஜுனா’ படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. இதைத் தொடர்ந்து, பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் சாக்சி வைத்யா கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். முந்தைய படங்களின் தோல்வியால் அவர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தற்போது, சாக்சி வைத்யா ஷர்வானந்துடன் இணைந்து ‘நாரி நாரி நாடு முராரி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து விலகியதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “‘ஏஜென்ட்’ மற்றும் ‘காந்திவதரி அர்ஜுனா’ படங்கள் தோல்வியடைந்ததால் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து நான் நீக்கப்பட்டேன் என்ற செய்தி உண்மையல்ல. தேதிகள் தொடர்பான பிரச்சினை காரணமாகவே நான் அந்தப் படத்திலிருந்து விலகினேன். என் இடத்தில் வேறு ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். பவன் கல்யாணுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை நான் ஒருபோதும் தவறவிட மாட்டேன்” என்றார்.

சாக்சி வைத்யா விலகிய பிறகு, அவரது இடத்தில் ஸ்ரீலீலா இணைந்தார். தற்போது ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்