ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

Update: 2021-10-18 00:25 GMT
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். அடுத்து ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரகாஷ் ராய் என்ற எனது பெயரை பிரகாஷ் ராஜ் என டைரக்டர் பாலசந்தர் மாற்றினார். அது எனது தலையெழுத்தையே மாற்றி விட்டது. இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் என்னை அழைத்து சென்று இருக்கிறது. எனக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தன. அதில் 4 சிறந்த நடிப்புக்காகவும் ஒரு விருது சிறந்த தயாரிப்பாளருக்காகவும் கிடைத்தது. 26 படங்கள் தயாரித்தேன். எல்லாமே குறைந்த பட்ஜெட் படங்கள்தான்.

பழம்பெரும் நடிகர்களில் எஸ்.வி.ரங்கா ராவ் மிகவும் பிடிக்கும். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை சேர்ந்தவர் போலவே அவரது நடிப்பு இருக்கும். தற்போதைய ஜெனரேஷன் தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் நடிப்பு மிகவும் பிடிக்கும். எனக்கு ஏழு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியும். மொழி தெரியாவிட்டால் அபிநயம் தெரியாது. எனவே நான் நடிக்கும் எல்லா மொழி படங்களுக்காகவும் அந்த மொழியை கற்றுக் கொண்டேன்” என்றார்.

மேலும் செய்திகள்