தமிழ்ப் படங்களைத் தாழ்த்திப் பேச வேண்டாம்: டைரக்டர் பேரரசு வேண்டுகோள்

டைரக்டர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-04-18 10:11 GMT
“கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுவது தவறில்லை. ஆனால், அந்தப்படத்தை தலையில் வைத்துக்கொண்டாடி தமிழ் படத்தை இழிவுபடுத்துவதும், கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் அழகல்ல. நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது தான் திரைப்படம். 

இந்திய திரையுலகிலேயே அதிக மொழி மாற்றம் செய்யப்பட்டது தமிழ் படங்கள்தான். இன்றும் இந்தியாவிலேயே தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கிறது. சமீபத்தில் ஓரிரு தெலுங்கு படங்களும், ஓரிரு கன்னட படங்களும் வெற்றி அடைந்ததால் தமிழ் திரை உலகம் பின் தங்கி விட்டதாகவும், தமிழ் இயக்குனர்களை திறமையற்றவர்களாகவும் விமர்சனம் செய்வது சரியல்ல. கன்னட படம் நன்றாக இருந்தால் பார்ப்போம். ஆனால், அதோடு ஒப்பிட்டு தமிழ் படத்தை தூற்றுவதை தவிர்ப்போம். தமிழ்நாட்டில் பல நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கலாம் ஆனால், நாம் எல்லோரும் தமிழர்கள். தமிழுக்கு ரசிகர்கள்.

இவ்வாறு பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்