"காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தை ரசிகர்களுடன் பார்த்த அனிருத்
"காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் சிறப்புக்காட்சியை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.;
சென்னை,
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியீட்டை ஒட்டி, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் அதிகாலையில் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதிகாலையில் திரையரங்கிற்கு வருகை தந்த இசையமைப்பாளை அனிருத், ரசிகர்களுடன் சேர்ந்து சிறப்புக்காட்சியை பார்த்து ரசித்தார்.