சைலி சவுத்ரியின் புது பட டீசர் வெளியீடு
இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் அனைவரையும் கவர்ந்த அமர் தீப் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அமர் தீப் மற்றும் சைலி சவுத்ரி ஆகியோர் இணைந்து சுமதி சதகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விஷன் மூவி மேக்கர்ஸ் பதாகையின் கீழ் கொம்மளபதி சாய் சுதாகர் தயாரித்துள்ள இந்தப் படத்தை எம்.எம். நாயுடு இயக்கி உள்ளார்.
இந்நிலையில், சுமதி சதகம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.