ஜிவி பிரகாஷின் ’இம்மோர்டல்’ பட டீசர் வெளியீடு

இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.;

Update:2025-12-24 19:02 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.

ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டுமே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வெளியானது.

‘இம்மார்ட்டல்’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘இம்மோர்டல்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்