அனிருத்தின் திருமணம் எப்போது..? - தந்தை ரவி ராகவேந்திரா பதில்

அனிருத் இன்னும் சிங்கிளாகவே வலம் வருகிறார்.;

Update:2025-12-24 19:45 IST

சென்னை,

தமிழ் , தெலுங்கு சினிமாவை தாண்டி இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக் இருந்து வருபவர் அனிருத். இவர் தற்போது தமிழில், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கும், இந்தியில் ஷாருக்கானின் கிங் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இருப்பினும், அனிருத் இன்னும் சிங்கிளாகவே வலம் வருகிறார். அவரது திருமணம் எப்போது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா இதற்கு பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், "இன்று எந்த பையன் அப்பா, அம்மாவிடம் வந்து நீங்கள் பெண் பாருங்கள் என்று சொல்கிறான். சிலர் சொல்லலாம். பலர் பெற்றோரிடம் கேட்பதில்லை

திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார்களே தவிர; நான் செய்துகொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. பார்ப்போம் அனிருத் எப்போது சொல்கிறார் என்பதை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்