வரதட்சணை கொடுமை: நடிகை ராக்கி சாவந்த் கணவர் அதிரடி கைது

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகை ராக்கி சாவந்த் .

Update: 2023-02-07 18:36 GMT

மும்பை,

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவத். 41 வயதான ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதேஷ் என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர், 2022ம் ஆண்டு ராக்கி சாவந்த்தும் - ரிதேசும் விவாகரத்து செய்தார்.

விவாகரத்திற்கு பின் ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தனது காதலனான அடில் கான் துரானியை 2-வது திருமணம் செய்தார்.

இந்து மதத்தை சேர்ந்த ராக்கி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தனது காதலனான அடிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தனது கணவர் அடில் கான் துரானி தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும், தன் பணம் நகைகளை பறித்துக்கொண்டதாகவும் ராக்கி போலீசில் புகார் அளித்தார்.

மேலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், மத வழிபாடு செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், தன்னை தாக்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்களை அளித்தார்.

நடிகை ராக்கி சாவத் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடில் கான் துரானியை போலீசார் இரவு 11 மணியளவில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்