மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சித்திக்கிடம் விசாரணை

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் பிரபல நடிகர் சித்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

Update: 2022-06-23 10:46 GMT

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் திலீப் 2017-ல் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர். திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனுக்கும் நடிகை கடத்தலில் தொடர்பு இருப்பது போன்ற ஆடியோ வெளியானதால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் சித்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில், திலீப் செய்தது தவறுதான். ஆனாலும் நான் திலீப் பக்கம் இருப்பேன் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சித்திக்கிடம் விசாரணை நடத்தினர். வழக்கின் முதல் குற்றவாளி எழுதிய கடிதத்தில் சித்திக் பெயர் இடம்பெற்று இருந்தது. அதுகுறித்தும் விசாரித்தனர். சித்திக், தமிழில், ரங்கூன், வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்