மீண்டும் விஜயுடன் மோதும் அஜித்...! லியோ போன்று படத்திற்கு ஆங்கில தலைப்பு

தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-02-24 07:04 GMT

சென்னை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார் என கூறப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏகே62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன மகிழ் திருமேனி லண்டன் சென்று லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை ஒப்புதல் பெற்றதாகவும், அஜித்தும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. அத்துடன் லியோ படத்தை போன்று ஏகே 62 படத்திற்கு "டெவில்" உள்பட 3 ஆங்கில டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஏதாவது ஒன்று முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு தலைப்புடன் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

லியோ படத்தின் வெளியீடு ஆயுத பூஜையையொட்டி, இந்தாண்டு அக். 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அதே தேதியில் ஏகே62 படத்தையும் வெளியிட அஜித் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும், விரைவாக படத்தை திட்டமிட்டு முடிக்கும் வகையில் மகிழ் திருமேனி படப்பிடிப்புக்கு திட்டமிடுவார் என கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நிழல் உலகம் குறித்தும் ஆழ்ந்த பார்வையுள்ள மகிழ், லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் பாணி படமாக பார்க்கப்படும் லியோவிற்கு சரியான போட்டியாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்