62-வது படத்துக்கு தயாரான அஜித்

அஜித் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

Update: 2023-02-16 02:14 GMT

அஜித்குமார் துணிவு படம் வெளியானதும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க ஏற்கனவே முடிவாகி இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் அவரை படத்தில் இருந்து கழற்றி விட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அவரை நீக்கி விட்டதாக தகவல் பரவி உள்ளது. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தின் 62-வது படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ஆயுத பூஜையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அதுபோல் அஜித் பட அறிவிப்பு வெளியாகும்போதே ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று தெரிகிறது. 4 மாதங்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்