மியூசிக் வீடியோ ஆல்பத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்துள்ள ஆல்பம் பாடல் பற்றிய அப்டேட்டை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Update: 2024-03-14 15:37 GMT

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என  லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற ஒரு கான்சப்டை உருவாக்கினார்.

இதற்கு முன் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாட பெற்றது. கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ் நேற்று இரவு தன் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஷ்ருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர். அதன் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இப்பாடலை ஸ்ருதி ஹாசன் எழுதி, பாடி அதை இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இனிமேல்' என இந்த ஆல்பம் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், "லோகேஷ் கனகராஜ் அறிமுகம்" என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லோகேஷுக்கு கமல் ஹாசன் வரிகள் எழுதுவது குறித்த இந்த அப்டேட் வெளியாகி தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்