பூலோகமே ஒரு சொர்க்கமானதே... கவனம் ஈர்க்கும் 'மதிமாறன்' பட பாடல்..!

மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ள 'மதிமாறன்' படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.

Update: 2023-12-20 11:29 GMT

சென்னை,

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே மற்றும் எல்.ஜி.எம். படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகை இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். உருவகேலியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, இ.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.

மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'மதிமாறன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் 'பூலோகமே ஒரு சொர்க்கமானதே' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பால சீதாராமன் எழுதியுள்ள இந்த பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்