தந்தை-மகனுடன் படுக்கையை பகிர்ந்த பிரபல நடிகை; டுவிட்டர் பயனாளர் பதிவுக்கு நடிகை பதிலடி

இயக்குநரான தந்தையுடனும், ஹீரோவான மகனுடனும் படுக்கையை பல முறை பகிர்ந்தவர் என்ற டுவிட்டர் பயனாளரின் பதிவுக்கு பிரபல நடிகை பதிலடி கொடுத்து உள்ளார்.

Update: 2023-04-12 10:43 GMT

மும்பை,

பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவரை டுவிட்டர் பயனாளர் ஒருவர் கடுமையான வசை சொற்களால் சாடியுள்ளார். வெளிநாட்டில் உள்ள திரைப்பட தணிக்கை வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

அந்த நபர் வெளியிட்ட பரபரப்பு டுவிட்டர் பதிவில், பாலிவுட்டில் தந்தையுடனும் (பெரோஸ் கான்) மற்றும் மகனுடனும் (பர்தீன் கான்) பல முறை படுக்கையை பகிர்ந்த ஒரே நடிகை செலீனா ஜெட்லி ஆவார் என பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதற்கு நடிகை செலீனா ஜெட்லி பதிலடி கொடுத்து உள்ளார். அந்த பதிவில், டியர் சந்து அவர்களே, இந்த பதிவை வெளியிட்டதற்காக ஆணாக இருப்பதற்கான தங்களது இடுப்பு சுற்றளவு பெருத்தும், நீண்டும் இருக்கும் என நம்புகிறேன். உங்களுடைய விறைப்பு தன்மை செயல்படாத தன்மை சரியாகி இருக்கும் என்றும் நம்புகிறேன்.

 

உங்களுடைய பிரச்சனையை சரி செய்ய வேறு சில வழிகளும் உள்ளன. இதன்படி மருத்துவரை அணுகுவது போன்ற விசயங்களை நீங்கள் நிச்சயம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து, இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி டுவிட்டர் பாதுகாப்பு குழுவையும் அவர் டேக் செய்து உள்ளார்.

நடிகை செலீனா ஜெட்லி முதன்முறையாக பாலிவுட்டில் ஜனாஷீன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். பெரோஸ் கான் இயக்கிய அந்த படத்தில் அவரது மகன் பர்தீன் கான் நடித்து உள்ளார். ஜெஸ்சிகா பெரைரா வேடத்தில் செலீனா நடித்து உள்ளார்.

இதுதவிர, டாம் டிக் அண்டு ஹாரி, அப்னா சப்னா மணி மணி, நோ எண்ட்ரி மற்றும் கோல்மால் ரிடர்ன்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்