நேபாளம், பூடான் தொடர்ந்து, நடிகர் அஜித்குமாரின் அடுத்தக்கட்ட பைக் சுற்றுபயணம் எங்கே? மேலாளர் கூறிய தகவல்...!
நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட பைக் சுற்றுப்பயணம் இந்தாண்டு நவம்பரில் தொடங்கும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.;
சென்னை,
நடிகர் அஜித்குமார் சினிமா தவிர்த்து, கார் பந்தயம், பைக் டூர், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு நேரம் போக அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வது அஜித்தின் வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'துணிவு' படப்பிடிப்பின் இடையே, ஐரோப்பாவில் தன் நண்பர்களுடன் பைக் டூர் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
'துணிவு' படப்பிடிப்புக்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்ல இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது அவர் தனது பைக் டூரை மீண்டும் தொடங்கினார் புனே, ஐதராபாத், சிம்லா மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளை கடந்து நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டார்.
நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணித்து முடித்து விட்ட நடிகர் அஜித், அடுத்தாக நவம்பர் 2023-ல் உலகம் முழுவதும் பயணிக்க உள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா டுவீட் செய்துள்ளார்.
சவாலான நிலப்பரப்புகளில் சவாரி செய்து தீவிரமான மோசமான வானிலையை கூட எதிர்கொண்டார். அஜித் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணித்து முடித்து விட்டார். நேபாளம் மற்றும் பூடானையும் கடந்து சென்றார். நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட பைக் சுற்றுப்பயணம் இந்தாண்டு நவம்பரில் தொடங்கும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித், அடுத்தாக நவம்பர் 2023-ல் உலகம் முழுவதும் பயணிக்க உள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்தது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.