ரூ.600 கோடியை தாண்டிய 'ஜெயிலர்' பட வசூல்..!

தமிழகத்தில் ‘ஜெயிலர்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.25 கோடியை எட்டியது;

Update:2023-08-27 09:21 IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி வெளியானது. இதில் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி விநாயகம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

'ஜெயிலர்' படம் தமிழகத்தில் 720 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. எந்தமுறையும் இல்லாத வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில் ரிலீசானது.

தமிழகத்தில் 'ஜெயிலர்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.25 கோடியை எட்டியது. கர்நாடகாவில் ரூ.11.85 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடியும், ஆந்திரா-தெலுங்கானாவில் ரூ.11.5 கோடியும், இதர பகுதிகளில் ரூ.3 கோடியும், வெளிநாடுகளில் ரூ.42 கோடியும் என உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

அந்தவகையில் ரிலீஸ் ஆகி 16 நாட்கள் கடந்த நிலையில், 'ஜெயிலர்' படத்தின் மொத்த வசூல் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதனால் 'ஜெயிலர்' படக்குழு உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்