படவிழாவுக்கு கிளாமராக வந்த ஜான்வி கபூர்

மும்பையில் நடந்த படவிழாவில் ஜான்வி கபூர் கலந்துகொண்டார்.;

Update:2024-05-26 07:07 IST

image courtecy:instagram@janhvikapoor

மும்பை,

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் நடித்து முடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி  திரைப்படம் வரும் 31 அன்று வெளியாகிறது. இதற்கான, புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மும்பையில் நடந்த படவிழாவில் ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் கிளாமராக காணப்பட்டது. நிகழ்ச்சி முழுவதும் அவரது ஆடையை பற்றி பேச்சு எழுந்தபடியே இருந்தது.

இதையடுத்து இன்ஸ்டாகிராமிலும் அதன் புகைப்படங்களை ஜான்வி கபூர் வெளியிட, இத்தனை நாட்களாக 'என்ன விலை அழகே...' என்று பாட்டு பாடியவர்கள், இப்போது 'இந்த ஆடை என்ன விலை?' என்று கேட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்