வைக்கம் முகமது பஷீர் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து

நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2024-01-21 16:18 GMT

சென்னை,

வைக்கம் முகமது பஷீர் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், 'சுல்தான்'வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்