நயன்தாரா பெரிய நடிகை இல்லையா? இயக்குனர் சர்ச்சை பேச்சு

நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் தெரிவித்திருப்பது, நயன்தாரா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2022-07-25 06:33 GMT

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவை பெரிய நடிகை இல்லை என்று இழிவுபடுத்தி விட்டதாக பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கரண் ஜோகர் நடிகை சமந்தாவிடம் தென் இந்திய திரைப்பட துறையில் பிரபலமான நடிகை யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா தென் இந்திய சினிமாவில் நயன்தாராதான் பெரிய நடிகை என்றார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்றார். அவரது பேச்சு சர்ச்சையானது. நயன்தாரா ரசிகர்கள் கரண் ஜோகருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கரண் ஜோகர் யார் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியில் தயாரான குட்லக் ஜெர்ரி படம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது உங்களுக்கு தெரியுமா என்றும், நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற திறமையான நடிகைகள் தென் இந்தியாவில் உள்ளனர் என்றும், தென் இந்திய திரையுலகம் மீது கரண் ஜோகருக்கு எப்போதுமே பொறாமை என்றும் பலர் கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்