பாராசூட்டில் பறந்த 'கோட்' பட நடிகை

நடிகை மீனாட்சி சவுத்ரி, பாராசூட்டில் பறக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Update: 2024-05-24 04:37 GMT

சென்னை,

தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் 2023ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி பாராசூட்டில் பறக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதனுடன், நான் முதல்முறையாக பாராகிளைடிங் செய்கிறேன். மிகவும் பிடித்திருக்கிறது, என்று பதிவிட்டார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்