'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற முதல் இந்திய இயக்குனர் - வரலாறு படைத்த பாயல் கபாடியா

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது.

Update: 2024-05-26 02:48 GMT

image courtecy:instagram@ieentertainment

பாரிஸ்,

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிரண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்