பிரபல நடிகரை விமர்சித்த பூனம் கவுர்

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை விமர்சித்து பூனம் கவுர் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.;

Update:2023-05-14 19:00 IST

தமிழில் நெஞ்சிருக்கும்வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என்வழி தனி வழி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை விமர்சித்து பூனம் கவுர் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பகத்சிங் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோவையும் போஸ்டரையும் வலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். பவன் கல்யாண் கால்களை காட்டும் போஸ்டர் ஒன்றில் அவரது கால்கள் பக்கத்தில் உஸ்தாத் பகத்சிங் என்ற பெயர் இடம்பெற்று உள்ளது.

இதுதான் பூனம் கவுருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறிப்பிட்டு வலைத்தளத்தில் பூனம் கவுர் வெளியிட்டுள்ள பதிவில், "படத்தின் போஸ்டரில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பெயரை உங்கள் காலடியில் வைத்து அவமதித்து இருக்கிறீர்கள். இது ஆணவமா? அறியாமையா? புரட்சியாளர்களை நீங்கள் மதிக்காதபோது அவர்களை அவமரியாதை செய்யாதீர்கள்'' என்று கண்டித்து உள்ளார். இது பரபரப்பாகி உள்ளது. பூனம் கவுருக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்