கேலிகளால் தூக்கம் இல்லாமல் தவித்தேன் - நடிகை சமந்தா

அவதூறு, கேலிகளால் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.;

Update:2022-06-16 18:51 IST

நடிகை சமந்தா கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்ததும், அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே சமந்தா கையில் 5 பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. மேலும் சில படவாய்ப்புகள் வரிசைகட்டுகின்றன. திருமண முறிவுக்கு பிறகும் சமூக வலைதளங்களில் சளைக்காமல் பதிவுகள், புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நான் அதிகமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். எனக்கு ரசிகர்களோடு பேசுவது, அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிப்பது பிடிக்கும். என் சம்பந்தப்பட்ட படங்களை வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பிடிக்கும். அந்த உணர்வே தனி. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சிலர் என்னை கேலி செய்கின்றனர். கொடூரமாக அவதூறு பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களால் நான் எத்தனையோ இரவுகளை தூக்கமில்லாமல் கழித்தேன். நான் தவறு செய்யாத வரை எனக்கு எந்த வேதனையும் இல்லை. என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக அவர்களை திரைப்படங்கள் மூலம் சந்தோஷப்படுத்த எனது சக்திக்கு வஞ்சனையில்லாமல் உழைப்பேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்