திருப்பதியில் நடிகர் ராம் சரண் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதியில் நடிகர் ராம் சரண் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-03-27 05:56 GMT

திருப்பதி,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ராம் சரண் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன்படி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் நடிகர் ராம் சரண் வந்துள்ளார். அங்கு அவர் குடும்பத்துடன் ஏழு மலையானை சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, இன்று காலை ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் வெளியானது. 

Tags:    

மேலும் செய்திகள்